எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி இவர்தான்: ஷ்ருதி ஹாசன்
நடிகை ஷ்ருதி ஹாசன் ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்...
நடிகை ஷ்ருதி ஹாசன் தனக்குப் பிடித்த கதாநாயகி குறித்து பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இவர் நடித்த பான் இந்திய திரைப்படமான சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.
தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன், ’ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் கேள்வி - பதில் பகுதியில் ரசிகர் ஒருவர் ஷ்ருதியிடம், “உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?” எனக் கேட்டிருந்தார். அதற்கு ஷ்ருதி ஹாசன், “எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான்” எனக் கூறியுள்ளார்.
நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நிறைய திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். முக்கியமாக, 16 வயதினிலே, மூன்றாம் பிறை ஆகியவை இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
Actress Shruti Haasan has spoken about her favorite heroine.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.