FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துல்கர் சல்மானின் ஏஒடி படத்தின் டீசர்!

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ஏஒடி என்ற படத்தின் டீசர் குறித்து...

17 அக்டோபர் 2026, 2:49 pm IST
ஏஒடி படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / கீதா ஆர்ட்ஸ்
பகிர்:

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ஆகாசம் ஒக தாரோ என்ற தெலுங்கு திரைப்படம் உருவாகியுள்ளது. ஏஒடி என தமிழில் அழைக்கப்படும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் ஐயம் கேம் என்ற படம் வெளியானது.

இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை குன்னம் கங்கராஜு எழுத பவன் சதினேனி இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் பாலியல் வழக்கில் கைதானார்.

இந்தப் படத்தில் சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்தில் வெளியாகிறது.

இப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் தமிழ் டீசர் வெளியாகியுள்ளது.

summary

Dulquer Salmaan, Shruti Haasan AOT - Tamil Teaser

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments