முகப்பு

பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நாம் யார்? துல்கர் சல்மான் பேச்சு!

மலையாள நடிகர் துல்கர் சல்மான் பெண்களின் சுதந்திரம் குறித்து பேசியிருப்பதாவது...

பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நாம் யார்? துல்கர் சல்மான் பேச்சு!
துல்கர் சல்மான் - படம்: இன்ஸ்டா / துல்கர் சல்மான்
பகிர்:

மலையாள நடிகர் துல்கர் சல்மான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “பெண்களின் சுதந்திரத்தில் தலையிடவோ அவர்களுக்கு அனுமதி அளிக்கவோ நாம் யார்?” எனக் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மானின் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) என்ற படத்தில் நடிகை சாத்விகா வீரவள்ளி நாயகியாக அசத்தியுள்ளார்.

இந்தப் படத்தில் ஷ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் நாயகி சமூகக் கட்டமைப்புகளைக் கடந்து தனது கனவை நிறைவேற்ற நாயகன் துல்கர் சல்மான் உதவுவார். இந்தப் படத்தின் புரமோஷனுக்காக சுமா & சாட் ஷோவில் பங்கேற்ற துல்கர் சல்மான் பேசியிருப்பதாவது:

இன்னொருவரைக் கட்டுப்படுத்த நாம் யார்? அது அவர்களுடைய வாழ்க்கை. நாம் அவர்களது கணவனாகவோ சகோதரராகவோ தந்தையாகவோ இருந்தாலுமே பெண்கள் என்ன செய்ய வேண்டுமெனக் கூற தகுதியில்லை; ஒன்றைச் செய்ய அனுமதி அளிக்கவும் வேண்டியதில்லை.

இந்தப் படத்தில் நான் நடித்த கிருஷ்ணா கதாபாத்திரம் ஒரு வசனத்தைப் பேசியிருப்பேன். அதில் ‘அவளைப் படிக்க வேண்டாமென நான் எப்போதுமே சொன்னதில்லை’ என்றார்.

நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.45-38 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வெற்றி விழாவும் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

summary

Dulquer Salmaan speaks about women's freedom: 'Who are we to control them?'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.