ஏஓடி உண்மையான உணர்வுகளுடன் நேர்மையாக உருவாக்கப்பட்டது: துல்கர் சல்மான்
ஏஓடி குறித்து துல்கர் சல்மான் பேச்சு....
நடிகர் துல்கர் சல்சான் ஏஓடி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் நடித்த ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படம் நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் மூலம் சாத்விகா வீரவள்ளி நாயகியாக அறிமுகமாகிறார். விண்வெளிக்குச் செல்ல ஆசைப்படும் பெண்ணின் கதையாக இது உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் துல்கர் சல்மான், “ஏஓடி மிகவும் சிறப்பான திரைப்படம். இது தெலுங்குப் படமோ, தமிழ்ப் படமோ அல்ல. இந்தியாவின் எந்தவொரு சிறிய நகரத்திலும் நடக்கக்கூடிய ஒரு இந்தியக் கதை.
உண்மையான உணர்வுகளுடன் நேர்மையாக உருவாக்கப்பட்ட திரைப்படம். வசூல் கணக்குகளையும் எண்ணிக்கைகளையும் மனதில் கொள்ளாமல், சினிமா மீதான அன்பாலும் ஆர்வத்தாலும் மட்டுமே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் வெளியானபோது எனக்குக் கிடைத்த குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் ஒரு பிரம்மாண்டமான கமர்ஷியல் படத்தை உருவாக்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தின. அதுதான் சினிமாவின் மாயம். எதையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம், நமது கதையை முழு ஆர்வத்துடனும் அன்புடனும் சொல்லிவிட்டு, பார்வையாளர்கள் அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதுதான்.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை கிட்டத்தட்ட அனைவருமே பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பவர்கள்தான். எனக்கு ஒரு மகள் உள்ளார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சாருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கும் ஒரு மகள் இருக்கின்றனர்.
எங்கள் மகள்கள், சகோதரிகள் மற்றும் மனைவிகளுக்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.