துல்கர் சல்மானின் ஏஓடி டிரைலர்!
ஏஓடி திரைப்பட டிரைலர்...
நடிகர் துல்கர் சல்மானின் ஏஓடி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக வெளியா ஐஆம் கேம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
Advertisement
Advertisement
தற்போது, தெலுங்கில் ஸ்ரீஸ்ரீ மற்றும் இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) ஆகிய படங்களில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இரண்டு படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதில், ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படம் நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. சாத்விகா வீரவள்ளி நாயகியாக இப்படம் மூலம் அறிமுகமாகிறார். விண்வெளிக்குச் செல்ல ஆசைப்படும் பெண்ணின் கதையாக இது உருவாகியுள்ளது.