ஐஆம் கேம் எதனால் தோல்வியடைந்தது? துல்கர் சல்மான் பதில்!
நடிகர் துல்கர் சல்மான் தான் நடித்த ஐஆம் கேம் குறித்து பதில்...
நடிகர் துல்கர் சல்மான் தான் நடித்த ஐஆம் கேம் திரைப்படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார்.
நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த திரைப்படம் ஐஆம் கேம்.
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய செலவில் இப்படத்தைத் தயாரித்திருந்தது. ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்ததால் ரசிகர்களின் ஆதரவு பெரிதாகக் குறைத்தது. இதனால், இப்படம் குறைவான வணிகத்தைச் செய்தது. துல்கரின் தோல்விப்படம் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் நடிகர் துல்கர் சல்மானிடம் ரசிகர் ஒருவர் ஐஆம் கேம் ஏன் தோல்வியடைந்தது? எனக் கேட்டார்.
இதற்கு துல்கர் சல்மான், “சில நேரங்களில் நமது தரப்பிலிருந்து அனைத்தையும் சரியாகச் செய்தாலும், வெளிப்புறக் காரணிகளோ அல்லது பிற சூழ்நிலைகளோ எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுகின்றன. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு 200 முதல் 300 பேர் தேவைப்படுகிறார்கள். இது எளிதானது அல்ல. ஒருபோதும் சாதாரணமானதும் அல்ல. மேலும் இதற்கு எந்த சூத்திரங்களையோ அல்லது கோட்பாடுகளையோ நீங்கள் பயன்படுத்த முடியாது. உலக சினிமாவில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் அல்லது நடிகரும் வேண்டுமென்றே தவறுகளைச் செய்யவோ அல்லது ஒரு மோசமான படத்தை உருவாக்கவோ நினைப்பதில்லை. உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் நினைத்தபடியே நடந்திருக்கிறதா? அப்படி, பல வெளிப்புறக் குழுக்களுடனும் இயங்கும் ஒரு அமைப்பைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் எப்போதும் என் குழுவின் பக்கமே நிற்பேன். யாரையாவது நீங்கள் குறை சொல்ல விரும்பினால் என்னைச் சொல்லலாம்." எனத் தெரிவித்துள்ளார்.
Actor Dulquer Salmaan has opened up about the failure of the film Im Game, in which he starred.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.