FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரே நாளில் வெளியாகும் மம்மூட்டி - துல்கர் திரைப்படங்கள்!

மம்மூட்டி - துல்கர் திரைப்படங்கள் வெளியீடு குறித்து....

நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான்
பகிர்:

நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் திரைப்படங்கள் ஓரே நாளில் வெளியாகவுள்ளன.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்மூட்டியும் துல்கர் சல்மானும் தென்னிந்திய அளவில் பெரிய வணிகத்தை வைத்துள்ளனர்.

தற்போது, நடிகர் மம்மூட்டி தமிழில் நடிகர் தனுஷுடன் ஓம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல், நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் ஆகாசம்லோ ஒக்க தாரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில், ஷ்ருதி ஹாசன், ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மம்மூட்டி நடித்த ஓம் திரைப்படமும் துல்கரின் ஆகாசம்லோ ஒக்க தாராவும் நவ. 20 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்கும் தெலுங்கில் வரவேற்பு இருக்கும் என்பதால் திரையரங்க ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

Films starring Mammootty and Dulquer Salmaan are set to be released on the same day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments