FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்முறை! அவரவர் திரைப்பட வெளியீட்டைப் பகிர்ந்த மம்முட்டி - துல்கர்!

ஓ.ம், ஏஓடி வெளியீடுகள் குறித்து...

நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான்
பகிர்:

அப்பா, மகன் நடிகர்களான மம்மூட்டியும் துல்கர் சல்மானும் இணைந்து புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மம்மூட்டி தமிழில் நடிகர் தனுஷுடன் ஓம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. நீண்ட காலம் கழித்து மம்மூட்டி நடித்த தமிழ்ப்படம் என்பதால் அவரின் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

Advertisement

Advertisement

அதே நேரம், நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் ஆகாசம்லோ ஒக்க தாரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில், ஷ்ருதி ஹாசன், ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விண்வெளிக்குச் செல்லும் நாயகியின் போராட்டத்திற்கு துணை நிற்கும் நாயகனின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

மம்மூட்டி நடித்த ஓம் திரைப்படமும் துல்கரின் ஆகாசம்லோ ஒக்க தாராவும் நாளை (நவ. 20) ஒரே நாளில் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்கும் தமிழ், தெலுங்கில் வரவேற்பு இருக்கும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

முக்கியமாக, மம்மூட்டியும் துல்கரும் ஒரே நாளில் வெளியீட்டைக் காண்பது இதுவே முதல்முறை. இந்த நிலையில், இருவரும் இணைந்து அவரவர் திரைப்படங்களின் வெளியீட்டை புரோமோவாக வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Father-son actors Mammootty and Dulquer Salmaan have released a promo together.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.