துல்கர் சல்மானின் ஏஓடி வசூல் எவ்வளவு?
ஏஓடி திரைப்படத்தின் வசூல் குறித்து....

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் நடித்த ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படம் கடந்த நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் மூலம் சாத்விகா வீரவள்ளி நாயகியாக அறிமுகமானார். விண்வெளிக்குச் செல்ல ஆசைப்படும் பெண்ணின் கதையாக உருவான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் கூடுதல் வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாக அடுத்த அடுத்த நாள்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால், வசூல் ரீதியாக இப்படம் இதுவரை ரூ. 30 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
துல்கரின் ஐஆம் கேம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், அடுத்த திரைப்படத்தில் அவர் வெற்றியைக் கொடுத்துள்ளது அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.