FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஷ்ருதி ஹாசனின் போலி ஏஐ புகைப்படங்களை நீக்க உத்தரவு!

ஷ்ருதி ஹாசனின் போலி புகைப்படங்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு...

5 செப்டம்பர் 2026, 2:16 pm IST
நடிகை ஷ்ருதி ஹாசன்... - படம்: இன்ஸ்டா / ஷ்ருதி ஹாசன்.
பகிர்:

நடிகை ஷ்ருதி ஹாசனின் போலி ஏஐ புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை நீக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இவர் நடித்த பான் இந்திய திரைப்படமான சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.

தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன், ’ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் நடிகை ஷ்ருதி ஹாசன் மும்பை உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய போலி ஏஐ புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை சமூக வலைதங்களிலிருந்து நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்

தற்போது, விசாரணை முடிவில் உயர்நீதிமன்றம் ஷ்ருதி ஹாசன் தொடர்பான போலியான ஏஐ உருவாக்கங்களை நீக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், பல நடிகைகளின் புகைப்படங்களைத் தவறாக சித்திரித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே காணவும் முடிகிறது.

A Mumbai court has ordered the removal of fake AI-generated photos and videos of actress Shruti Haasan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments