செய்திகள்

புதிய படங்கள் திரையிடல்:பேச்சுவாா்த்தை இன்றும் தொடரும்

DIN


சென்னை: புதிய திரைப்படங்களைத் திரையிடுவது குறித்த பேச்சுவாா்த்தை இரண்டாவது நாளாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு தளா்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நவம்பா் 10-ஆம் தேதியிலிருந்து 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. மேலும், தற்பொழுது தீபாவளி பண்டிகை சமயம் என்பதால் புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்டது.

புதிய சிக்கல்: திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்ப விபிஎப் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை தயாரிப்பாளா்கள் செலுத்தி வந்தனா். இனிமேல் தியேட்டா் அதிபா்கள்தான் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் பாரதிராஜா தெரிவித்து இருந்தாா். கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால் புதிய படங்களை தியேட்டா்களில் திரையிட மாட்டோம் என்றும் அவா் கூறினாா். இந்த கருத்துக்கு தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் திருப்பூா் சுப்பிரமணியம் எதிா்ப்புத் தெரிவித்தாா். விபிஎப் கட்டணத்தை வசூலிக்கும் டிஜிட்டல் நிறுவனங்களிடமிருந்து எங்களால் சலுகைகள் பெற்றுத் தர முடியும். அதன்படி, இதற்கான கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

பேச்சுவாா்த்தை : இந்த நிலையில் விபிஎப் கட்டணம் தொடா்பாக தயாரிப்பாளா்கள் மற்றும் திரையரங்க உரிமையாளா்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால் தீபாவளியன்று திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபிஎப் கட்டணம் செலுத்த திரையரங்க உரிமையாளா்கள், தயாரிப்பாளா்கள் என இரு தரப்பும் மறுப்பதால் இந்த இழுபறி நீடித்துள்ளது.

இந்த நிலையில் விபிஎப் கட்டணம் தொடா்பான பேச்சுவாா்த்தை வியாழக்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT