முகப்பு
செய்திகள்

இன்ஸ்டகிராமில் நேற்றிரவு வரை புகைப்படங்களைப் பதிவேற்றிய நடிகை சித்ரா

சின்னத்திரையின் பிரபல நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சித்ரா, சென்னையில் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Updated On : 9 டிசம்பர் 2020, 12:55 pm IST
பகிர்:

சின்னத்திரையின் பிரபல நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சித்ரா, சென்னையில் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

2003-ல் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கவனம் பெற்ற சித்ரா, ஜெயா, ஜீ தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். 2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் என்பவருடன் சித்ராவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் ஜனவரி மாதம் திருமணம் செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சித்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

இந்நிலையில் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்ட சித்ரா, நேற்றிரவு வரை இன்ஸ்டகிராம் தளத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். 

நேற்று இரு புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவு செய்தார் சித்ரா. அதன்பிறகு நேற்றிரவு கடைசியாக மற்றொரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments