செய்திகள்

சந்தானம் நடிக்கும் சபாபதி

DIN

அறிமுக இயக்குநர் ஆர். சீனிவாச ராவின் படத்தில் சந்தானம் நடிக்கிறார். இப்படத்துக்கு சபாபதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஆர்கே எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் - கும்பகோணம், திருச்சி, சென்னையில் படமாக்கப்படவுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். மகன் - தந்தை உறவைச் சொல்லும் இப்படத்தில் தந்தை வேடத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடிக்கிறார். 

சந்தானம் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து சபாபதி படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடித்த ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன்.கே அடுத்ததாக சந்தானத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். பாரிஸ் ஜெயராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத் என சந்தானம் நடித்த  படங்கள் வெளியாகின. டிக்கிலோனா என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT