முகப்பு
செய்திகள்

''நானும் தம்பியும் இரட்டை சகோதரர்கள்'' - புகைப்படம் பகிர்ந்து அதிர்ச்சியளித்த நடிகர் சூரி

நடிகர் சூரி  முகநூல் பக்கத்தின்  மூலம் தன்னுடன் ஒரே நாளில் பிறந்த தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஆகஸ்ட் 2021, 2:07 pm IST
பகிர்:

நடிகர் சூரி தனது முகநூல் பக்கத்தின் மூலம் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில்  தனி இடம் பிடித்தவர் நடிகர் சூரி. தனக்கென ஒரு தனி பாணியில் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை செய்து வருகிறார். 

வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. 

Advertisement

Advertisement

இந்த நிலையில் இன்று நடிகர் சூரியின் பிறந்த நாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில், ''ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன். உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன். 

என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி. அடுத்த ஜென்மத்தில் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி'' என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூரியும் அவரது தம்பியும் இரட்டை சகோதரர்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.