செய்திகள்

''இந்து என்ற மதம் ...'' - ரூ.400 கோடி வசூல் குறித்து நடிகர் பார்த்திபன் சர்ச்சை ட்வீட்!

ரூ.400 கோடி வசூல் குறித்து நடிகர் பார்த்திபன் தனது சுட்டுரை பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

DIN

ரூ.400 கோடி வசூல் குறித்து நடிகர் பார்த்திபன் தனது சுட்டுரை பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் இன்னும் சில நாளகளில் ரூ.500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ.163 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்து அமெரிக்காவில் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு  (இ)ப்ப  லாம்! எழு  ப்பினால் … இன்னும் ஒரு 100! என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது, இந்து மதம் என்ற சர்ச்சையால் பொன்னியின் செல்வன் ரூ.400 கோடி வசூலித்துவிட்டது. மேலும் இந்த விவாதம் வலுத்தால் மேலும் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று நடிகர் பார்த்திபன் மறைமுகமாக சொல்கிறாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT