மது விளம்பரத்தில் நடிக்க மறுத்த சிம்பு!
நடிகர் சிம்பு பிரபல பன்னாட்டு மதுபான நிறுவன விளம்பரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு பிரபல பன்னாட்டு மதுபான நிறுவன விளம்பரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து ‘பத்து தல’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: ’பொன்னியின் செல்வன்’ டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
அதை முடித்த பின்பு புதிய திரைப்படத்தின் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபல பன்னாட்டு மதுபான நிறுவனம் ஒன்று நடிகர் சிம்புவை அணுகி தங்கள் விளம்பரத்தில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாகக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
ஆனால், சிம்பு அந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான காரணம் வெளியாகவில்லை என்றாலும், அவருடையை ரசிகர்கள் இச்செய்தியைக் கொண்டாடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.