’பிச்சைக்காரன் - 2’ படக்குழுவினர் கைது
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இதையும் படிக்க: ’இந்தியன் - 2’ கதை இப்படித்தான் இருக்கும்: ஜெயமோகன்
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படத்திற்காக அனுமதிபெற்று சென்னை ரிப்பன் பில்டிங், ராஜிவ் காந்தி மருத்துவமனையை டிரோன் கமெரா மூலம் படக்குழுவினர் படம்பிடித்துள்ளனர்.
ஆனால், அனுமதி இல்லாமல் சென்னை உயர்நீதிமன்ற வளாகம், பார் கவுன்சில் வளாகம் ஆகியவற்றையும் படம் பிடித்துள்ளனர். இதனைக் கண்ட காவலர்கள் டிரோனை இயக்கிய சுரேஷ், நவீன்குமார், ரூபேஷ் ஆகிய 3 பேரைக் கைது செய்து பின் ஜாமினில் விடுவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.