மீண்டும் ஆத்ரேயாவாக சூர்யா - உருவாகிறது 24 படத்தின் இரண்டாம் பாகம்
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 24 படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 24 படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா மூன்று வேடங்களில் நடித்த 24 படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. டைம் டிராவல் முறையில் உருவான இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தும் தரப்பினரையும் கவர்ந்தது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் ஆத்ரேயா என்ற எதிர்மறை வேடத்தில் நடிகர் சூர்யா மிரட்டியிருப்பார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் உருவாகவிருப்பதாக இயக்குநர் விக்ரம் குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சூர்யா ரசிகர்கள் இப்பொழுதே சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.