''இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்'': பாலா இயக்கத்தில் நடிப்பது குறித்து சூர்யா நெகிழ்ச்சி
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
'நந்தா', 'பிதாமகன்' படத்துக்கு பிறகு 3வது முறையாக பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று(28/03/2022) துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனை அறிவிக்கும்விதமாக பாலாவுடன் எடுத்துக்கொண்ட படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, ''என்னுடைய குரு பாலா அண்ணா ஆக்சன் என சொல்வதற்காக இத்தனை நாளாக காத்திருந்தேன். 18 ஆண்டுகளுக்கு பிறகு அது நடந்திருக்கிறது. உங்களுடைய வாழ்த்துகள் தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தை சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த 'நந்தா' திரைப்படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. சூர்யாவை சிறந்த நடிகராக திரையுலகுக்கு அடையாளம் காட்டியது.
பிறகு பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து 'பிதாமகன்' படத்தில் அவர் நடித்திருந்தார். அதுவரை அமைதியான வேடத்தில் நடித்துவந்த சூர்யா, 'பிதாமகன்' படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்.
பின்னர் பாலா தயாரிப்பில் 'மாயாவி' படத்தில் சூர்யா நடித்திருந்தார். மேலும் அவன் இவன் படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.