முகப்பு
செய்திகள்

மீண்டும் நாயகனாக நடிக்கும் கவுண்டமணி!

நடிகர் கவுண்டமணி மீண்டும் நாயகனாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 20 ஜனவரி, 2023 at 2:44 PM
பகிர்:

நடிகர் கவுண்டமணி மீண்டும் நாயகனாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இன்றளவும் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்க வைப்பவை.

இதையும் படிக்க: ’லவ் டுடே’ இதுவரை வசூல் எவ்வளவு?

Advertisement

உடல்நிலை காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்தவர் கடந்த 2015 ஆம் ஆண்டு 49-ஓ திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து ’எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் தற்போது மீண்டும் ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை செல்வம் தயாரிக்கும் இப்படத்தை அன்பரசன் இயக்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.