இயக்குநர் மணிரத்னம் குரலில் பேசி அசத்திய ஜெயராம்!
பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம்போல் நகைச்சுவையாக மிமிக்ரி செய்தார் நடிகர் ஜெயராம்.
பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம்போல் நகைச்சுவையாக மிமிக்ரி செய்தார் நடிகர் ஜெயராம்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டனர்.
மேடையில் நடிகர்கள் பார்த்திபன் மற்றும் ஜெயராம் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினர்.அப்போது, ஜெயராம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகர் பிரபுவின் குரலில் பேசியதும் அரங்கிலிருந்தவர்கள் பலமாக சிரிக்கத் துவங்கினர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம்போல் மிமிக்ரி செய்ததும் மீண்டும் அரங்கம் அதிரும் அளவிற்கு சிரிப்பொலிகள் எழுந்தன.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.