செய்திகள்

எதிர்நீச்சல் போல... வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் 2 தொடர்கள்!

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த எதிர்நீச்சல் தொடர் மக்களிடம் பெற்ற வரவேற்பின் எதிரொலியாக, ஞாயிற்றுக்கிழமையிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகிவருகிறது. இதேபோன்று மேலும் இரண்டு நெடுந்தொடர்கள் வாரத்தின் ஏழு நாள்களிலும் ஒளிபரப்பாகவுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை வேலைகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களைப் பெற்றுவிடுகின்றன. 

அந்தவகையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த எதிர்நீச்சல் தொடர் மக்களிடம் பெற்ற வரவேற்பின் எதிரொலியாக, ஞாயிற்றுக்கிழமையிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தி எதிர்நீச்சல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மேலும் இரு தொடர்கள் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது. 

விராட் - டெல்னா டேவிஸ்

இதேபோன்று டெல்னா டேவிஸ், விராட் நடிக்கும் அன்பே வா தொடரும் இனி ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை பிரின்ஸ் இம்மானுவேல் இயக்கியிருந்த நிலையில், தற்போது ராஜேந்திரன் இயக்கி வருகிறார். இந்தத் தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மேலும், நேத்ரா எனும் மாயாஜாலம் நிறைந்த தொடரும் இனி  ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகிறது. இந்தத்தொடர் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT