கமல் 234 படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் நடிகர்!
கமல் 234 படத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் பிரபலம் ஜெயம் ரவி இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கமல் 234 படத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் பிரபலம் ஜெயம் ரவி இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் அறிமுக முன்னோட்ட விடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோ கமலின் பிறந்த நாளான நவ.7-ல்(நாளை) வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். மேலும், இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
கமல்ஹாசனின் 234வது படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், கமல் 234 படத்தில் ஜெயம் ரவி இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.