முகப்பு
செய்திகள்

பிக் பாஸில் இருந்து வெளியேறிய முதல் நபர் யார்?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 அக்டோபர் 2023, 9:40 pm IST
பகிர்:

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சீசன்களை போல் அல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள், இரண்டு நாமினேஷன்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த வாரம் வீட்டின் கேப்டன் விஜய், விசித்திரா, பிரதீப் ஆண்டனியின் சர்ச்சை கருத்தும், பவா செல்லத்துரையின் கதையும் சக போட்டியாளர்களின் விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கிடையே, ரவீனா, ஐஷு, பிரதீப், ஜோவிகா, பவா செல்லத்துரை, யுகேந்திரன் மற்றும் அனன்யா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டு மக்களின் வாக்கெடுப்புக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் வார இறுதி நாள் நிகழ்வுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்து ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

இதில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நபராக மலேசியா வாசுதேவனின் மகனும், பாடகருமான யுகேந்திரன் குறைவான வாக்கு பெற்று வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவுள்ள யுகேந்திரனின் வெளியேற்றம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமூக ஊடகங்களிலும் யுகேந்திரனின் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.