முகப்பு
செய்திகள்

விஜய் 68: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விஜய் 68வது படத்தின் அப்டேட்கள் நாளை முதல் வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 23 அக்டோபர் 2023, 7:22 pm IST
பகிர்:

விஜய் 68வது படத்தின் முக்கிய அறிவிப்புகள் நாளை முதல் வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த்,  வைபவ், சினேகா, லைலா, பிரியங்கா மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விஜய் 68வது படத்தின் பூஜை தொடர்பான விடியோ நாளை(அக்.24) பிற்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments