’அன்பு இதயங்களே.. குணமடைந்து விட்டேன்’: விஜய் ஆண்டனி
தன் உடல்நிலை குறித்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
தன் உடல்நிலை குறித்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்கமும் அவரே தான். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இருப்பினும் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் அவருக்கு ஜெர்மனியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: சாதி, அதிகாரம், தந்தையின் பாசம்... பொம்மை நாயகி | திரை விமர்சனம்
இந்நிலையில், இன்று விஜய் ஆண்டனி தன் டிவிட்டர் பக்கத்தில், ‘ அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.’ எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.