அடடா! 1 மணி நேர மின் தடையை நாசூக்காக சொன்ன தொல். திருமாவளவன்!
தன்னுடைய பகுதியில் 1 மணி நேர மின் தடை ஏற்பட்டதை நாசூக்காகக் குறிப்பிட்டிருக்கிறார் தொல். திருமாவளவன்
தன்னுடைய பகுதியில் 1 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதாக தொல். திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் பல மணி நேரம் தொடர் மின் வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். பல இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில், தொல். திருமாவளவனின் பதிவு வைரலாகியிருக்கிறது.
தவெக தலைமையிலான ஆட்சியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன், தங்களுடைய பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டாமல், அதனை மிக நாசூக்காக வெளிப்படுத்தியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Advertisement
Advertisement
ஆளுங்கட்சியில் இடம்பெற்றிருக்கும் நிலையில் பிரச்னைகளை இப்படியும் சொல்லலாமா என்று பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
அதாவது, தொல். திருமாவளவன் இன்று அதிகாலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,
விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் மேனாள் இந்திய அமைச்சருமான அண்ணன் ப. சிதம்பரம் அவர்கள் இன்று (ஜூன் 19) மாலை 6.00 மணியளவில் வருகை தந்தார். அவரது வருகை எமக்கு பெருமகிழ்வையும் பெருமையும் அளித்தது.
அவர் வந்த சிறிது நேரத்தில் திடுமென மின்சாரம் நின்றுபோனது. வெளிச்சம் இல்லாத நிலையிலும், 'ஏசி' இயங்காத நிலையிலும் கூட நெடுநேரம் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக) எம்மோடு இருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது.
Wow! Thol. Thirumavalavan tactfully announced the one-hour power cut!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.