சப்த சாகரதாச்சே எல்லோ: ரசிகர்களின் ஆதரவில் கூடுதல் காட்சிகள் !
ரக்ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கன்னட திரைப்படம் ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
ரக்ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடிப்பில் வெளியான கன்னட திரைப்படம் ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ' படம் கடந்த செப்.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதையும் படிக்க: வெளியானது அனிமல் படத்தின் 4வது பாடல்!
தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதி.
Advertisement
Advertisement
கார் ஓட்டுநரான காதலன், தன் காதலி சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டு செய்யாத குற்றத்திற்காக பணத்தை வாங்கிக்கொண்டு சிறைக்குச் செல்கிறான். அங்கு, அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் வெளியில் இருக்கும் காதலியின் நிலையுமாக கதை விரிகிறது. இறுதியில் ஒரு டிவிஸ்டைக் கொடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான சைட் பி-க்கு முன்கதைச் சுருக்கத்தைக் கூறியிருக்கின்றனர்.
கன்னட ரசிகர்களை மட்டுமின்றி இப்படம் பலரையும் கவர்ந்து வருவதால் அடுத்த பாகமான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி’ ரசிகர்களிடயே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. முதல் பாகத்தைவிட இந்தப் பாகத்துக்கு சென்னையில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.