வைரலாகும் மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: தனுஷ் - 50 படப்பிடிப்பு தீவிரம்!
Advertisement
Advertisement
மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வெள்ளை உடையில் நீரில் இருப்பது போன்ற புகைப்படங்களை மாளவிகா பகிர்ந்துள்ளார். தற்போது, இப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.