முகப்பு
செய்திகள்

ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு வெளியீடு?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

Updated On : 9 ஆகஸ்ட் 2024, 3:49 pm IST
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்து ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை வழங்கினார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்தார்.

ஜெயிலர்

ஜெயிலர் படத்திற்குப் பிறகு நெல்சன் புதிய படத்தின் கதை தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த்தும் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 அன்று வெளியாகிறது.

இந்த நிலையில், லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கும் ரஜினி, அதற்கு அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் இணைவார் என செய்திகள் வெளிவந்துள்ளன.

ஜெயிலர் படம் வெளியாகி நாளை (ஆகஸ்ட் 10) ஒரு ஆண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து, ஜெயிலர் - 2 படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.