விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விவசாயம் செய்யும் சசிகுமார்!

இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் தனது வயலில் விவசாயம் செய்யும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

சசிக்குமார்

Published On :9 ஆகஸ்ட் 2024, 1:36 pm IST

இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் தனது வயலில் விவசாயம் செய்யும் படங்களைப் பகிர்ந்து தனது வயலில் நடவு நடப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு திரைப்படங்களை இயக்கி வந்தார். அதேவேளை, நடிப்பிலும் ஆர்வம் கொண்ட அவர், நாயகனாக நடித்தும் தனக்கென ரசிகர்களை பெற்றார்.

சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 50 கோடி வரை வசூலித்தது. இவர் நடித்துள்ள ’ஃபீரீடம் ஆகஸ்ட் 14’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சசிக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயலில் நடவு நடும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் மண் சார்ந்த கதைகளில் நடித்துள்ள சசிக்குமார், விவசாயம் தொடர்பான விஷயங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டவராகவே தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தற்போது தனது வயலில் நடவு நடும் பெண்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘எங்க வயலில் நடவு’ என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.