விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சுதா கொங்காரா படத்தில் லோகேஷ் கனகராஜ்?

Published On :8 ஆகஸ்ட் 2024, 6:35 pm IST

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாகத் தகவல்.

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு புறநானூறு எனப் பெயரிடப்பட்டது.

சில காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இது ஜி.வி.யின் 100வது படம் என்றும் கூறி வந்தார்கள்.

சூர்யா கங்குவா படத்தில் நடித்துமுடித்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா ஹிந்தியில் சூரரைப் போற்று படத்தினை இயக்கி முடித்தார். அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதற்கிடையே, புறநானூறு திரைப்படம் சூரரைப்போற்று படத்தைவிட பல மடங்கு சிறந்ததாக இருக்கும் என சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புறநானூறு படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, லோகேஷ் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது முடிந்ததும், சுதா கொங்காரா படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.