செய்திகள்

மாயாண்டி குடும்பத்தார் - 2: மீண்டும் நடிகராகும் சீமான்

DIN

மாயாண்டி குடும்பத்தார் - 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் இயக்கத்தில் கடந்த 2009-ல் வெளியான திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார். இப்படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி, பொண்வண்ணன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதில்  2 ஆம் பரிசை மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்துக்கு கிடைத்தது.

இந்நிலையில், மாயாண்டி குடும்பத்தார்  படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறது.

மாயாண்டி குடும்பத்தார் முதல் பாகத்தில் நடித்த கே.பி. ஜெகன் இப்படத்தை இயக்குகிறார். அரசியல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் சீமான், இப்படத்தின் மூலம் மீண்டும் நடிகராக களமிறங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதியில் லேசான மழை

ஆதனக்கோட்டையில் இயற்கை பூச்சிக்கொல்லிகள் விழிப்புணா்வு முகாம்

ஆலங்குடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இரு வீடுகளில் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகள் திருட்டு

மேக்கேதாட்டு அணை விவகாரம் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை

SCROLL FOR NEXT