முகப்பு
செய்திகள்

பவதாரிணியின் மறைவைக் கேட்டு இதயம் நொறுங்குகிறது: பாடகி சின்மயி உருக்கம்

உடல்நலக் குறைவால் காலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவுக்கு பிரபல பாடகி சின்மயி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 25 ஜனவரி 2024, 10:04 pm IST
பகிர்:

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி (47) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

உடல்நலக் குறைவால் காலமான பாடகி பவதாரிணியின் மறைவுக்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாடகி சின்மயி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் அறிந்த மிகச்சிறந்த மனிதர்களில் பவதாரிணியும் ஒருவர். மிகவும் அன்பான பெண். அவர் மறைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 

Advertisement

Advertisement

இளையராஜா, கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments