முகப்பு
செய்திகள்

அசோக் செல்வனின் புதிய பட அறிவிப்பு!

நடிகர் அசோக் செல்வனின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 15 மார்ச் 2024, 6:46 pm IST
பகிர்:

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இதனிடையே, சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த சபா நாயகன் திரைப்படம், டிச.22ஆம் தேதி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வன், இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு, ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தை எம். திருமலை தயாரிக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments