FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இளையராஜா இசையில்... மாரி செல்வராஜ் படத்தின் பெயர் அறிவிப்பு!

மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம் குறித்து...

Updated On : 1 ஜூன் 2026, 12:28 pm IST
மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் புதிய படம். - படம்: விடியோ கிளிப்
பகிர்:

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ் சில வாழ்க்கை அனுபங்களை இதழ்களில் எழுதி கவனம் பெற்றார்.

பின், இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படமாக பரியேறும் பெருமாள் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கடைசியாக, இவர் இயக்கிய பைசன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு மஞ்சணத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

மஞ்சணத்தி படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளது குறித்து காணொளி ஒன்றை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு பதிவில் மாரி செல்வராஜ், ”எதிர்பார்த்த அந்தத் தருணம், நிறைவாக நிகழ்ந்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

'நவ்வி ஸ்டுடியோஸ்' சார்பாக மாரி செல்வராஜின் மனைவி திவ்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான நிலையில், இந்தப் படம் தள்ளிப்போகிறது.

அடுத்ததாக, வாழை - 2 திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

summary

The title of the new film directed by Mari Selvaraj has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments