முகப்பு
செய்திகள்

டாக்ஸிக் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா!

யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படம் பற்றி...

Updated On : 2 ஏப்ரல் 2025, 9:29 pm IST
நயன்தாரா
பகிர்:

யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’.

கேஜிஎஃப் - 2 படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Advertisement

Advertisement

கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, மும்பையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகை நயன்தாரா டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இவர் நடித்த டெஸ்ட் திரைப்படம் வருகிறா ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து டாக்ஸிக் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைவதற்காக நயன்தாரா மும்பை சென்றுள்ளார். தனது மகன்களுடன் அவர் மும்பை விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு எடுக்கப்பட்ட விடியோ வெளியாகியுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா

டாக்ஸிக் திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments