சிவராஜ்குமார் - அபிஷன் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ்!
அபிஷன் படத்தின் படப்பிடிப்பு கிளிம்ஸ்...
நடிகர்கள் அபிஷன் ஜீவிந், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக நல்ல வரவேற்பைப் பெற்றவர் அபிஷன் ஜீவிந். தொடர்ந்து, வித் லவ் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்தும் கவனம் ஈர்த்தார்.
வணிக ரீதியாக அப்படம் வெற்றிப்படமானதால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் கௌதம் இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில், நடிகர் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்க, நாயகிகளாக யோக லட்சுமி, சிவானி நாகரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
தற்போது, இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதற்கான கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். அப்பா - மகன் உறவை முன்னிலைப்படுத்தும் படமாக இது உருவாகி வருகிறது.
The first schedule glimpse video of the film starring actors Abishen Jeevin and Shivarajkumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.