பிக்காசோ
சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் "பிக்காசோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார்.
சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் "பிக்காசோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார்.
டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளின் நடுவே அமர்ந்திருக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவரின் இயல்பான, குறும்புத்தனமான தோற்றமும், அவர்களைச் சுற்றியுள்ள வெடித்த பட்டாசுகளும் மாறுபட்ட காட்சியமைப்பை உருவாக்குகின்றன. வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"டிராமா கம்பெனி' வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாடகர் கானா வினோத் நடிகராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.