FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி...

9 அக்டோபர் 2026, 3:45 pm IST
இறுதிப்பக்கம் 2 - போஸ்டர்
பகிர்:

குமரன் தங்கராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் வெளியான ‘இறுதிப்பக்கம்’ படத்தின் அடுத்த படைப்பாக ‘இறுதிப்பக்கம் 2’ உருவாகியுள்ளது.

மர்மம் மற்றும் எமோஷனல் திரில்லர் நிறைந்த கதையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து பிரபலமான குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை, டிரைலர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

summary

First look of the movie ‘Irudhippakkam 2’ released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments