பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!
பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இணைந்த நடிகர் குமரன் தங்கராஜன்.
விஜய் தொலைக்காட்சியில் இன்று(செப். 6) முதல் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் 10 சீசனில் நடிகர் குமரன் தங்கராஜன் இணைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெறும்.
வழக்கமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள். இம்முறை, அறிமுக நிகழ்ச்சியிலே போட்டியாளர்களை வெளியேற்றும் நிகழ்வு நடந்துள்ளது.
Advertisement
Advertisement
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன், பிக் பாஸ் - 10 நிகழ்ச்சியின் போட்டியாளராகப் பங்கேற்கிறார்.
யார் இந்த குமரன் தியாகராஜன்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் குமரன் தங்கராஜன்.
இதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.
தொடர்ந்து, மாய தோட்டா, வதந்தி இணையத் தொடரில் நடித்திருந்தார். பின்னர், பாலாஜி வேணுகோபால் இயக்கிய குமார சம்பவம் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
தொடந்து, இறுதிப்பக்கம் படத்தை இயக்கிய மனோ கண்ணதாசன் இயக்கத்தில் புதிய படத்தில் குமரன் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that actor Kumaran Thangarajan has joined the cast of Bigg Boss Season 10, which is set to air on Vijay TV starting today (September 6).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.