FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் - காமன் மேன் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு! நடுவர்களாக ஓவியா, ஆரி, ராஜு!

பிக் பாஸ் காமன் மேன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:35 pm IST
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 10வது சீசன் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், விஜய் சேதுபதியே இந்தப் புதிய சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார். வழக்கமான பிக்பாஸ் போல இல்லாமல், இந்தாண்டு நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய சீசன்களில் சினிமா, தொலைக்காட்சி நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் போட்டியாளர்களாகப் பங்கேற்று வந்தனர்.

Advertisement

Advertisement

இம்முறை பொதுமக்கள் (பிக் பாஸ் காமன் மேன்) பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கலந்துகொண்டு வெற்றி பெற்றால், நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் vijay.jiostar.com என்ற தளத்தில் உங்களில் சுய விவரங்களையும், ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் 2 நிமிட விடியோவாகப் பதிவு செய்ய வேண்டும்.

பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இதில் வெற்றி பெற்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

பிக்பாஸ் - காமன் மேன் நிகழ்ச்சி ஆக. 16 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். அதேபோல, முன்னாள் போட்டியாளர்கள் ஓவியா, ராஜு, ஆரி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

summary

The broadcast date for the 'Bigg Boss Common Man' show, set to air on Vijay TV, has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments