FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சர்ச்சையான தனது பிக் பாஸ் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசப்பட்ட கருத்து குறித்து விஜய் சேதுபதியின் விளக்கம் குறித்து...

19 செப்டம்பர் 2026, 3:55 pm IST
விஜய் சேதுபதி - படம்: எக்ஸ் / விஜய் டெலிவிஷன்
பகிர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசப்பட்ட தனது கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையானதைத் தொடர்ந்து அதற்கு விஜய் சேதுபதியின் விளக்கம் அளித்துள்ளது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகராக இருந்து கட்சி தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் சி. ஜோசப் விஜய். பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கூறிய தலைமைப் பண்பு பற்றிய கருத்துகள் முதல்வரைப் பற்றியது என சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

இந்த நிலையில், சனிக்கிழமைக்கான புதிய புரோமோ விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த புரோமோவில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறப்படும் கருத்துகள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் எனக்கும் மட்டுமேயானது. இது வெளியில் இருக்கும் எந்தவொரு நபரையும் குறிப்பிட்டு பேசியதில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனை கடந்த வாரமே கூறி இருக்க வேண்டும். நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என இருந்தேன். தற்போது இதனைத் தெளிவுப்படுத்த வேண்டிய தேவை இருந்தது எனக் கூறியுள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ’பத்தா’ என்ற படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதும் அட்லீ தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

Vijay Sethupathi puts an end to the controversy surrounding his Bigg Boss comment!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments