FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தெறித்து ஓடுவது என்பது... முதல்வர் விஜய்யைச் சீண்டிய விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி பேச்சு வைரல்....

13 செப்டம்பர் 2026, 11:42 am IST
நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் விஜய் - மாஸ்டர் திரைப்படத்தில்
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியது வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் தொழில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்திற்காக முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அங்கு நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தையும் நேரில் சென்று முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

நடிகர் அஜித்தையும் முதல்வர் விஜய்யையும் ஒரே இடத்தில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ததுடன் அதன் புகைப்படங்களையும் விடியோக்களையும் அதிகம் பகிர்ந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பிக்பாஸ் - 10 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு வீட்டிற்குள்ளேயே சட்டமன்றம் போன்ற போட்டியை நடத்தினர். நிர்வாக அணி, எதிரணி என இரண்டு அணிகளாகவும் அவர்கள் செயல்பட்டனர்.

அதற்காக, நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளரை நெறிப்படுத்த பேசிய போது, “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என்றார். மறைமுகமாக இப்பேச்சு முதல்வர் விஜய்யைச் சாடுவதாக இருப்பதாக பலரும் விஜய் சேதுபதியின் பேச்சைப் பகிர்ந்து வருகின்றனர்.

What actor Vijay Sethupathi said on the Bigg Boss show has gone viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments