விஜய் சேதுபதி - 56 திரைப்படத்தின் பெயர், வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு...
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பான் இந்திய அளவிலும் கவனம் பெற்று வருகிறார். இறுதியாக இவர் நடித்த மகாராஜா, தலைவன் தலைவி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகின. தற்போது, ஸ்லம்டாக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியுடன் நடித்தும் வருகிறார்.
இதற்கிடையே, இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்தத் திரைப்படத்திற்கு பத்தா எனப் பெயரிட்டுள்ளதையும் இப்படம் அக். 1 ஆம் தேதி வெளியாகும் என்பதையும் படத்தின் தயாரிப்பாளர் அட்லி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படம் 1960-களில் நடந்த கதையாக எழுதப்பட்டுள்ளது. இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
The release date of the film starring actor Vijay Sethupathi and directed by Balaji Tharaneetharan has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.