அடுத்த அரசியல்வாதி? மாநில ஒருங்கிணைப்பாளரை நியமித்த விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளர்...
நடிகர் விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்திற்கு புதிய தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமித்துள்ளார்.
இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. குறும்படங்களில் நடித்து தனக்கான வாய்ப்புகளைச் உருவாக்கி தென்மேற்கு பருவக்காற்று மூலம் நாயகனாக அறிமுகமானவர், தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென்று ரசிகர்களையும் வைத்திருக்கிறார்.
வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பதால் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்கள், பொதுவான சமூகப் பார்வை என வித்தியாசமான எண்ணங்களைக் கொண்ட விஜய் சேதுபதியின் நேர்காணல் விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும்.
Advertisement
Advertisement
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்த சில ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில், இந்த நிகழ்ச்சியில் பேசும்போது தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாக விஜய் சேதுபதி தாக்கியதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். முக்கியமாக, தவெக கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பத்தா திரைப்பட நிகழ்வில், தான் யாரையும் குறித்து அப்படிச் சொல்லவில்லை என விஜய் சேதுபதி விளக்கமளித்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்திற்குப் பி. பிரசாத் என்பவரைப் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிறப்பான செயல்பாடு, அமைப்பின் மீதான ஈடுபாடு, நிர்வாகத் திறன் மற்றும் பங்களிப்பை கருத்தில் கொண்டு பி. பிரசாத்தை அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) இன்றுமுதல் நியமனம் செய்கிறேன்.
மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்பு பணிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை உருவாக்குதல் உறுப்பினர் சேர்க்கையை மேம்படுத்துதல் மற்றும் மன்றத்தின் அனைத்து அமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தல் ஆகிய பொறுப்புகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அமைப்பின் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் தலைமை நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, ஒற்றுமையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டு, ரசிகர் மன்றத்தில் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மன்றத்தின் வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்ப்பிர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியிடமிருந்து வந்த இந்த அறிக்கை சாதாரணமாக இருந்தாலும் பலரும் நடிகர் தனுஷைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் அரசியல் ஆசையில் இருக்கிறார் போல என விவாதித்து வருகின்றனர்.
Actor Vijay Sethupathi has appointed a new chief coordinator for his fan club.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.