பிக் பாஸ் போட்டியாளர்களைக் கண்டித்த விஜய் சேதுபதி!
பிக் பாஸ் போட்டியாளர்களை விஜய் சேதுபதி கண்டித்தது குறித்து...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாங்கள் தொடர வேண்டும் என வாக்களிக்கும் மக்களுக்காக முன்வந்து விளையாட முடியாதா என போட்டியாளர்களிடம் தொகுப்பாளரும் நடிகருமான விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு உங்கள் சுயத்தை விட்டுக்கொடுத்தது எதற்கு போட்டியில் நீடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 9 வாரங்களை நிறைவு செய்துள்ளது. கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து வாரத்தின் இறுதியில் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார்.
Advertisement
Advertisement
அந்தவகையில், கடந்த வாரம் நடைபெற்ற ரேங்கிங் டாஸ்க் குறித்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். ரேங்கிங் டாஸ்க் என்பது, போட்டியாளர்கள் தான் எந்த இடத்துக்கு தகுதியான நபர் என்பதை நிரூபிக்கும் வகையில் தனக்குரிய இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
வரிசையாக ஒன்று முதல் 15 வரை தூண்கள் வைக்கப்பட்டிருக்கும். அதில், தான் எந்த இடத்துக்கு தகுதியான நபர் என்று நினைக்கிறாரோ எந்த தூண் அருகே சென்று நிற்க வேண்டும்.
இதில், முதல் இடத்திற்கு போட்டிபோடாமல் தன்னுடைய தகுதி இதுதான் என பின்னோக்கி நின்றவர்களை விஜய் சேதுபதி கடுமையாக விமர்சித்தார்.
முதல் இடத்துக்கு போட்டியிடுவதன் மூலம் மட்டுமே உங்களை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு எனக் குறிப்பிட்டார்.
உங்கள் சுயத்தை விட்டுவிட்டு பின்னோக்கிய இடத்தில் உங்களை நீங்களே பொருத்திக்கொள்வது தவறான செயல் என்றும், சுயத்தை விட்டுக்கொடுத்து போட்டியில் நீடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.
உங்கள் ஆட்டத்துக்காக வாக்களிக்கும் மக்களுக்காக முதலிடத்தில் போட்டியிட்டு மற்ற போட்டியாளர்களிடம் நீங்கள்பேசவில்லை என்றால் வேறுயார் பேசுவார்கள் எனவும் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.