FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விளையாட்டில் உணவு அரசியலா? பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை!

பிக் பாஸ் வீட்டில் உணவு அரசியல் குறித்து போட்டியாளர்களிடையே விஜய் சேதுபதி பேசியது தொடர்பாக...

விஜய் சேதுபதி - கோப்புப் படம்
பகிர்:

பிக் பாஸ் மட்டுமல்ல எந்தவொரு விளையாட்டிலும் உணவு முறையை வைத்து ஒருவரை வெளியேற்ற நினைப்பது மிகவும் தவறு என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நடிகரும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி அறிவுரை கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 4வது வாரத்தை எட்டியுள்ளது. வார இறுதி நாள்களில் போட்டியாளர்களிடையே விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். அந்தவகையில் கடந்த வார நிகழ்வுகள் குறித்து நேற்று (சனிக்கிழமை) போட்டியாளர்களிடையே விஜய் சேதுபதி பேசினார்.

கடந்த வாரத்தில் லட்சுமி பிரியா, ஜாவேத், சவின்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் கைகளில் கயிறுடன் நுழைந்திருந்தனர். பிக் பாஸ் வீட்டில் இனி தங்க தகுதியற்ற ஒருவரை தேர்வு செய்து அவருடன் கயிற்றின் மறுமுனையை கட்டிக்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

லட்சுமி பிரியா குமரனுடனும், ஜாவேத் தன்யாவுடனும், சவின்யா அஸ்மிதாவுடனும் கயிற்றைக் கட்டிக்கொண்டனர். வார இறுதியில் கயிற்றில் கட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

வார இறுதியில் மற்ற உள்ளே நுழைந்த மூவரைத் தவிர மற்ற போட்டியாளர்கள் கயிறு கட்ட வேண்டும் என நினைத்தால் யாருக்கு கட்டுவீர்கள், அவரை என்ன செய்து வெளியேற்றுவீர்கள் என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பலரும் பதில் அளித்துவந்த நிலையில், நடிகை ஷாதிகா நடிகர் ராகவ்வுக்கு கயிறு கட்டுவேன் எனக் கூறினார். ராகவ் வெங்காயம் சாப்பிட மாட்டார் அவருக்கு வெங்காயம் வைத்து சமைத்த உணவைக் கொடுத்து அவரை கோபமடையச் செய்வேன் என்றும், அசைய உணவு சாப்பிடமாட்டார் என்பதால், அவருக்கு அசைய உணவை ஊட்டி அவரை கயிற்றை வெட்டிக்கொண்டு ஓடுமாறு செய்துவிடுவேன் எனவும் கூறினார்.

நடிகை முத்தழகியும் ராகவ்வை தேர்வு செய்து, வெங்காயத்தில் செய்து உணவை கொடுத்து ராகவ்வின் பொறுமையை சோதிப்பேன் என்றும், அவரை கோபமடையச் செய்தால், அவராகவே வெளியேறிவிடுவார் எனவும் கூறினார்.

இந்த பதில்களை கேட்ட விஜய் சேதுபதி, இது ஒரு தவறாக முறை. விளையாட்டுக்காக ஒருவரின் உணவு முறையை விவாதத்திற்குள் கொண்டுவந்து வெளியேற்றுவது என்பது சரியான விளையாட்டாகாது. சாப்பாடு விஷயத்தைத் தாண்டி விளையாடுவதற்கு நிறைய உள்ளது. அவற்றை வைத்து விளையாடி வெற்றி பெறுவதுதான் சிறந்த விளையாட்டாகவும் இருக்கும் அது சுவாரசியமாகவும் இருக்கும் எனக் கூறினார்.

சரி என நினைத்துப் பேசும்போது, தவறை சுட்டிக்காட்ட விஜய் சேதுபதியின் ஒருபோதும் தவறுவதில்லை என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

summary

Bigg boss 10 vijay sethuathi about food politics to shathiga and muthazhagi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments