FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல்! டப்பிங் பணிகள் தொடக்கம்!

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் “பாக்கெட் நாவல்” படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்...

பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கினார் நடிகர் விஜய் சேதுபதி... - எக்ஸ்
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் “பாக்கெட் நாவல்” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா - நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”. இப்படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கின்றார்.

Advertisement

Advertisement

“பாக்கெட் நாவல்” படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி கடந்த வெள்ளிக்கிழமை (அக். 23) அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

Dubbing work has begun for the film “Pocket Novel,” starring actor Vijay Sethupathi in the lead role.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments