விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படப்பிடிப்பு நிறைவு!
விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா கூட்டணியின் பாக்கெட் நாவல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து...
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள “பாக்கெட் நாவல்” திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”. ஏற்கெனவே, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இளையராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், “பாக்கெட் நாவல்” திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, இன்று (அக்.9) படக்குழுவினர் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
முன்னதாக, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
filming of the movie Pocket Novel, starring Vijay Sethupathi in the lead role, has been completed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.